Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியில் மாநாடு நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு !

Advertiesment
டெல்லியில் மாநாடு நடத்தியவர்கள் மீது  வழக்குபதிவு !
, செவ்வாய், 31 மார்ச் 2020 (20:48 IST)
டெல்லியில் மசூதியில் கூடியவர்களில் 2000 க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் 32 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி டெல்லி நிஜாமுதின் பகுதி மசூதி ஒன்றில் இஸ்லாமிய மத குருக்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அந்த சந்திப்புக்கு இந்தியா முழுவதும் உள்ள பல மசூதிகளிம் குருக்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா மட்டுமல்லாது தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலர் கலந்துகொண்டுள்ளனர். சுமார் 2 ஆயிரம் பேர் வரை அந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய காஷ்மீர் இஸ்லாமிய குரு ஒருவர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளார். கூட்டம் முடிந்த பிறகும் மசூதிகளில் தங்கியிருந்தவர்களை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் பலருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலரையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த கூட்டத்தை நடத்திய இஸ்லாமிய அமைப்பு மற்றும் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், டெல்லி நிசாமுதின் பகுதியில் மதம் சார்ந்த  மாநாடு நடத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 980 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகத் தகவல் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்