Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை சின்மயி முன்பு சுய இன்பம் செய்த வாலிபர் - போலீசாரிடம் புகார்

Advertiesment
Actres Chinmayee
, புதன், 21 பிப்ரவரி 2018 (14:53 IST)
மும்பையை சேர்ந்த நடிகை சின்மயின் முன்பு ஒரு வாலிபர் சுய இன்பம் செய்தது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 
பிரபல பாலிவுட் மற்றும் மராத்தி நடிகரும், மாடலுமான சுமித் ராகவன் தனது மனைவி சின்மயிவுடன் மும்பையில் வசித்து வருகிறார். சின்மயி மராத்தி படங்கள், மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில், மும்பை விலே பார்லே பகுதியில் சின்மயி நின்று கொண்டிருந்த போது, அவருக்கு எதிரே நின்ற ஒரு வெள்ளை நிற பி.எம்.டபுள்யு காரின் டிரைவர் அவர் முன்பு சுய இன்பம் செய்துள்ளார்.  இதுகண்டு அதிர்ச்சியடைந்த சின்மயி, அந்த நபரை தாக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த நபர் தப்பி ஓடு விட்டார்.

 
அந்த காரின் எண்ணை குறித்துக் கொண்ட சின்மயி, இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்படி அந்த காரின் டிரைவர் ஜீவன் சவுத்ரி(42) என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13 இலக்க மொபைல் எண்: யாருடைய பயன்பாட்டிற்கு??