Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலனின்றி காலமானார்! – விமானப்படை அறிவிப்பு!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (12:59 IST)
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண்சிங் உயிரிழந்ததாக விமானப்படை அறிவித்துள்ளது.

கடந்த 8ம் தேதி குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் விமானப்படை கேப்டன் வருண்சிங் 80 சதவீதம் உடல் எரிந்த நிலையில் பெங்களூர் விமானப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேருமே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments