முடியவே முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்
முடியவே முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்
தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரியை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நகைத் தொழிலில் ஒரு சதவீத கலால் வரியை மத்திய அரசு விதித்தது. இதற்கு நாடு மழுவதும் கடும் எதிரப்பு கிளம்பி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், அப்போது மத்திய அரசு பணிந்தது.
இந்த நிலையில், ராஜ்யசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலால் வரிவிதிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நிதியமைச்சர் அருண்ஜெட்லி பேசுகையில், சொகுசு பொருட்களுக்கு வரி விலக்க முடியாது என்றார்.
மத்திய அரசின் இந்த செயலுக்கு, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
http://tamil.webdunia.com/article/current-affairs-in-tamil/webdunia-news-avalable-in-app-116021500055_1.html