கொரோனாவால் பாதித்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாமா என்ற கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியும், 60 வயது மேற்பட்டவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகின்றன.
2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள் என ஏற்கனவே சுகாதார துறை அறிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது. இந்நிலையில் கொரோனாவால் பாதித்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாமா என கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு விளக்கம் அளித்து தற்போது அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியிருக்கிறது. முன்னதாக 2வது தடுப்பூசி போட்டவர்களுக்கு 9 மாதங்களுக்கு பிறகே கூடுதல் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியது. தற்போது கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே கூடுதல் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.