Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனிமேல் தியேட்டர், வணிக வளாகங்கள் 24 மணி நேரமும் இயங்கும் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இனிமேல் தியேட்டர், வணிக வளாகங்கள் 24 மணி நேரமும் இயங்கும் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
, புதன், 29 ஜூன் 2016 (19:09 IST)
சினிமா திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் ஆகியவை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கும் புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.


 

 
இந்த நவீன திட்டம் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தொழிலாளர் துறை அமைச்சகத்தின் சார்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. 
 
டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் ஆலோசிக்கப்பட்டு இறுதியில் புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறமுடியும் மற்றும் பெண்களும் இரவு நேரங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புதிய சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை. எனவே,  இந்த சட்டம் நேரடியாக அமலுக்கு வர உள்ளது.  அதன் அடிப்படையில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்றவை செயல்படும். இந்த சட்டம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அரசு தோல்வி : ராமதாஸ் தாக்கு