Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்சோ சட்டத்தில் திருத்தம்: குழந்தை பாலியல் குற்றத்திற்கு என்ன தண்டனை தெரியுமா?

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2018 (18:58 IST)
பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை காக்கும் வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் 3 மற்றும் 4 பிரிவின்படி குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கினால் குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டணையாகவும் இருந்தது. ஆனால் குழந்தைகளை பாலியல் கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும், அப்போதுதான் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் வலியுறுத்தப்பட்டது

இந்த நிலையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவையில் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் போக்சோ சட்டத்தின் 4,5,6,9,14,15, மற்றும் 42 வது பிரிவுகளை திருத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி இனிமேல் குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளர். இந்த சட்டதிருத்தத்திற்கு பின்னராவது குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்