Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமலுக்கு வந்தது குடியுரிமை சட்டம்: அரசு இதழில் வெளியீடு!

Advertiesment
National
, சனி, 11 ஜனவரி 2020 (08:12 IST)
நாடு முழுவதும் பல எதிர்ப்புகளை சந்தித்த இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

கடந்த மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் எழுந்தன. கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் முதல்வர்கள் நேரடியாகவே குடியுரிமை சட்டத்தை எதிர்த்தார்கள்.

அசாம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இப்படியாக பல்வேறு இடர்பாடுகளையும் தாண்டி இன்று முதல் குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டதை அரசு இதழில் இன்று வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவுன்சிலர் கடத்தல்; திமுகவினர் மீது பெட்ரோல் வீச்சு! – அதிமுகவினர் கைது!