7 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல்: 4 தொகுதிகளில் பாஜக முன்னிலை..!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (11:56 IST)
சமீபத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் நடந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த நிலையில்  7 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது என்றும் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் சமாதிவாடி சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும் பிற கட்சிகள் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
திரிபுரா மாநிலத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்த நிலையில் ஒரு தொகுதியில் பாஜகவும் இன்னொரு தொகுதியில் உள்ளூர் கட்சியும் முன்னிலையில் உள்ளன ’
 
இன்னும் சில மணி நேரத்தில் இந்த ஏழு தொகுதிகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
7 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்
 
கேரளா - காங்கிரஸ் முன்னிலை
 
உ.பி - சமாஜ்வாடி முன்னிலை
 
ஜார்கண்ட் - பாஜக கூட்டணி முன்னிலை
 
திரிபுரா (2) - பாஜக ஒன்றில் வெற்றி, மற்றொன்றில் முன்னிலை
 
உத்தரகாண்ட் - பாஜக முன்னிலை
 
மேற்கு வங்கம் - பாஜக முன்னிலை
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய எடுத்த முயற்சி முறியடிப்பு. FBI தகவல்..!

எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட வயது வரம்பு குறைக்கப்படுகிறதா? கல்லூரி மாணவர்களும் இனி போட்டியிடலாமா?

மீண்டும் ஹிஜாப் சர்ச்சை: கொச்சி பள்ளியில் இருந்து மாணவிகள் விலகல்..!

சிவகாசியில் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை.. கடந்த ஆண்டை விட ரூ.1000 கோடி அதிகம்..!

சென்னையில் தீபாவளி தினத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments