Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளின் திருமண செலவு பணத்தில் வீடற்றவர்களுக்கு வீடுகள்: தொழிலதிபர் புரட்சி

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (15:45 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மகள் திருமணத்திற்கு செலவிட இருந்த பணத்தில் வீடற்றவர்களுக்கு 90 வீடுகள் வழங்கியுள்ளார். இது உண்மையில் பாராட்டத்தக்கது.


 

 
பணக்காரர்கள் மற்றும் பெரிய தொழிலதிபர்கள் அவர்கள் வீட்டு திருமணத்தை மிக பிரம்மாண்டமாக கோடி கணக்கில் செலவு செய்து நடத்துவது வழக்கம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மகள் திருமணத்திற்கு செலவிட இருந்த பணத்தில் வீடற்றவர்களுக்கு 90 வீடுகள் வழங்கியுள்ளார். இது உண்மையில் பாராட்டத்தக்கது.
 
அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்த தொழிபதிபர் அஜய் முனாட் என்பவர், தனது மகள் திருமண விழாவிற்கு 70 முதல் 80 லட்சம் வரை செலவிட இருந்தார். திருமணத்தில் தேவைற்ற செலவுகளை குறைத்து, வீடற்றவர்களுக்கு 90 வீடுகள் வழங்கினார்.
 
இதுகுறித்து அஜய் முனாட் கூறியதாவது:-
 
இது வரலாற்றில் புது அத்தியாயம். இந்த முறையை மற்ற பணக்கார சமூகமும் பின்பற்றும் என்று நம்பிக்கை கொள்கிறேன். இந்த சமூகத்தில் நமக்கென்று பொறுப்பு உள்ளது, என்றார்.

அமைச்சர்கள் பெரும்பாலோனோர் அவர்களது வீட்டு திருமணத்தை கோடி கணக்கில் செலவு செய்து பிரம்மாண்டமாக நடத்துகின்றனர். இந்நிலையில் தொழிலதிபர் ஒருவர் செய்துள்ள இந்த செயல் பாராட்டத்தக்கது. அண்மையில் கர்நாடகாவில் ரூ.500 கோடி செலவில் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. இந்திய கடற்படையினர் அதிரடி..!

ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்