நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரையுடன் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் 25 ஆம் தேதி (வியாழக்கிழைமை) தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து, பொருளாதார அய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. பின்னர் 27(சனிக்கிழைமை) மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில், எதிர் கட்சிகள் பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்றத்தல் எழுப்பும் என்று கூறப்படுகின்றது.
மத்திய அரசு நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாக நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.