யாருமே வழங்காத சலுகை.. ஒரு மாத ரீசார்ஜ் இவ்வளவு தான்.. பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 12 ஜூன் 2025 (13:14 IST)
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், மற்றும் வோடபோன் வழங்க முடியாத ஒரு அதிரடி சலுகையை அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்  வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
பிஎஸ்என்எல் தற்போது 30 நாட்கள் வேலிடிட்டி உள்ள திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன் விலை வெறும் ₹199 தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. ₹200-க்குக் குறைவான விலையில் ஒரு மாத வேலிடிட்டி உள்ள திட்டம் வேறு எந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், பிஎஸ்என்எல் ₹199 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, அன்லிமிடெட் வாய்ஸ் கால் செய்யும் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
 
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும்பாலும் வெறும் 28 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி வழங்கி வருகின்றன என்றும், அது கூட ₹200-க்கு மேல் தான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பிஎஸ்என்எல் உண்மையாகவே ஒரு மாதத்திற்கான வேலிடிட்டியை அறிவித்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இன்னும் பல வாடிக்கையாளர்கள் கூடுதலாகக் கிடைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments