Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விருப்ப எண்களை ஏலம் விடுகிறது பிஎஸ்என்எல்.. ஏலம் விடும் தேதி அறிவிப்பு..!

Advertiesment
விருப்ப எண்களை ஏலம் விடுகிறது பிஎஸ்என்எல்.. ஏலம் விடும் தேதி அறிவிப்பு..!

Siva

, செவ்வாய், 21 ஜனவரி 2025 (08:21 IST)
மொபைல் போன் வைத்திருக்கும் சிலர் தங்களுக்கு விருப்பமான எண்களை பெற வேண்டும் என்று நினைப்பார்கள். வாகனங்களுக்கு எப்படி விருப்ப எண்களை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாமோ, அதேபோல் தொலைத்தொடர்புத்துறை நிறுவனங்களிலும் பணம் கொடுத்து விருப்பமான எண்களை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் விருப்ப எண்களை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது. ஜனவரி 25 முதல் 29 வரை இந்த ஏலம் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

தொழிலதிபர்கள் மற்றும் பிரபலமானவர்கள் தங்களுடைய மொபைல் எண்ணை அனைவரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பேன்சி எண்களை விருப்பத்துடன் வாங்குவார்கள். அலுவலக பயன்பாட்டிற்கும், குடும்ப பயன்பாட்டிற்கும் இந்த பேன்ஸி எண்கள் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், விருப்ப எண்களை ஏலம் விடுவதற்காக முடிவு செய்துள்ள பிஎஸ்என்எல், இதற்கான நேரத்தை அறிவித்துள்ளது. விருப்ப எண்களைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் http://www.eauction.bsnl.co.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்களது விருப்ப எண்களை ஏலம் கேட்கலாம்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பி.எஸ்.என்.எல்., சிம் இருந்தால் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோவில் இருந்தும் பேசலாம்.. புதிய வசதி..!