திருமண மேடையில் மணமகள் தனது முன்னாள் காதலனை மணமகனிடம் அறிமுகம் செய்ததால், அந்த திருமணமே நின்று போன விவகாரம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஜோடி ஒன்று சமீபத்தில் குருவாயூரப்பன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் நேரில் வந்து பரிசு பொருட்களை கொடுத்து புதுமண தம்பதியை வாழ்த்தினர்.
அப்போது, மேடைக்கு வந்த ஒருவரை, இவர் எனது முன்னாள் காதலர் என மணமகனிடம் அறிமுகம் செய்துள்ளார் மணமகள். இதனால் ஆவேசம் அடைந்த மணமகன், கழுத்தில் அணிந்திருந்த மாலையை கழற்றி வீசிவிட்டு ஆவேசமாக சத்தம் போட்டார்.
இதனால் அங்கு என்ன நடந்தது எனத் தெரியாத உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் அவர்கள் மணமகனிடம் விசாரிக்க, திருமணத்திற்கு முன்பே ஒருவனை
காதலித்திருக்கிறாள். அவனை என்னிடமே அறிமுகமும் செய்து வைக்கிறாள் இந்த பெண். இவள் எனக்கு வேண்டாம் என கூச்சல் போட்டார்.
இதனையடுத்து இருவீட்டாரும் அமர்ந்து பேசினார். ஆனால், சமாதானம் அடைய மறுத்த மணமகன், அந்த பெண்ணை ஏற்க மறுத்துவிட்டார். மேலும், தான் கட்டிய தங்க தாலி மற்றும் மணப்பெண்ணிற்கு வாங்கிக் கொடுத்த ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை தன்னிடம் திருப்பி தர வேண்டும் எனக் கூறியுள்ளார். எனவே, வேறுவழியின்றி மணப்பெண்ணும் தாலியை அவரிடம் கழற்றி கொடுத்தார்.
அதன் மேலும், ஆத்திரம் தீராத அந்த மணமகண், நேராக காவல் நிலையம் சென்று மணப்பெண் வீட்டார் மீது புகார் கொடுத்தார். காதலன் இருந்ததை மறைத்து எனக்கு திருமணம் செய்து கொடுத்ததால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு விட்டதாகவும், அதற்கு நஷ்ட ஈடு மற்றும் திருமண செலவு ஆகிய அனைத்து சேர்த்து ரூ.15 லட்சத்தை பெண் வீட்டார் கொடுக்க வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.