Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னுடைய பிரேக்கிங் செய்தியை தானே வாசித்த செய்தி வாசிப்பாளர்!

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (16:21 IST)
தன்னுடைய பிரேக்கிங் செய்தியை தானே வாசித்த செய்தி வாசிப்பாளர்!
பொதுவாக நாட்டில் நடக்கும் பிரேக்கிங் செய்திகளை செய்தி வாசிப்பவர்கள் வாசித்து வருவார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் தன்னுடைய பிரேக்கிங் செய்தியை தானே வாசிக்கும் வாய்ப்பு கேரளாவை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.
 
கேரளாவில் உள்ள மாத்ருபூமி என்ற மலையால தொலைக்காட்சியில் தலைமை இணை ஆசிரியராக இருக்கும் ஸ்ரீஜா ஷியாம் என்பவர் நேற்று காலையில் வழக்கம்போல் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கேரள அரசு  சிறந்த செய்தி தொகுப்பாளர் விருது ஸ்ரீஜாவுக்கு என அறிவித்தது. இதனை பிரேக்கிங் செய்தியாக மாத்ருபூமி வெளியிட அந்த செய்தியை ஸ்ரீஜாவே வாசித்தார்.
 
தன்னுடைய புகைப்படமும் தன்னைப்பற்றிய செய்தியும் பிரேக்கிங் செய்தியில் இடம்பெறுவதை பார்த்து ஒருநொடி இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய ஸ்ரீஜா, உடனே சுதாரித்து கொண்டே தான் பெற்ற விருது குறித்த செய்தியை அவரே வாசித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments