சீன பொருட்களை இந்தியாவில் புறக்கணிப்பதன் மூலம் சீனாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பாடாது. அது இந்தியாவையே பாதிக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது.
சீன பொருட்களை இந்தியாவில் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதைதொடர்ந்து எல்லோரும் சீன பட்டாசுகளை வாங்காதீர்கள் என்ற கருத்தையும் பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சீன பொருட்களை புறகணித்தல் எந்த விதத்திலும் சீனாவை பாதிக்காது. இந்தியாவில் சீனாவின் முதலீடு மற்றும் இரு நாடுகளின் உறவு போன்றவற்றுக்கும் பாதிப்பு ஏற்படாது.
சீன ஏற்றுமதியில் வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. என்வே சீன பொருட்களை புறகணித்தால், அது இந்தியாவில் உள்ள வணிகர்கள் மற்றும் நுகர்வேர்களை மட்டுமே பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.