Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணியை திருமணம் செய்துகொண்ட 15 வயது சிறுவன்: 2 மணி நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Advertiesment
அண்ணியை திருமணம் செய்துகொண்ட 15 வயது சிறுவன்: 2 மணி நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
, புதன், 13 டிசம்பர் 2017 (19:20 IST)
அண்ணன் இறந்ததால் அவரது மணைவியை தம்பிக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. ஆனால் திருமணம் ஆன 2 மணி நேரத்தில் அந்த சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது.
 
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் சந்தோஷ் தாஸ் என்பவருக்கும், ரூபி தேவி என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தன. இந்நிலையில் திடீரென சந்தோஷ் தாஸ் மரணமடைந்தார். சந்தோஷ் தாஸ் மரணமடைந்த பின்னர் அவரது மனைவி ரூபி தேவி இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களை காப்பாற்ற கஷ்டப்பட்டுள்ளார்.
 
இதனால் சந்தோஷ் தாஸின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் ரூபி தேவி மீது இரக்கப்பட்டு சந்தோஷ் தாஸின் தம்பி மஹாதேவ் தாஸை திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். மஹாதேவ் தாஸுக்கு 15 வயது தான் ஆகிறது. அவர் கயா மாவட்டத்தின் பரையா கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
 
இந்த திருமணத்தில் மஹாதேவ் தாஸுக்கு விருப்பம் இல்லை. ஆனால் அவரது பெற்றோரும் உறவினர்களும் அவரை கட்டாயப்படுத்தி அருகில் உள்ள கோவில் ஒன்றில் அண்ணி ரூபி தேவியுடன் திருமணம் செய்து வைத்தனர். இதனால் மனமுடைந்த மஹாதேவ் திருமணமான 2 மணி நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். தற்போது காவல்துறை தகவல் அறிந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மரணத்திற்கு பின் என்ன நடக்கும்? மூளை அறுவை சிகிச்சை நிபுணரின் அனுபவ புத்தகம்