Publish Date: Wed, 24 Aug 2016 (17:53 IST)
Updated Date: Wed, 24 Aug 2016 (18:01 IST)
உத்திரபிரதேச மாநிலத்தில் 19 வயது மாணவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் வாரனாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைகழக வளாகத்தில் 19 வயது மாணவர் ஒருவர், அவரது உறவினர் மருத்துவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது மருத்துவ அறிக்கை பெறுவதற்கு சென்ற மாணவரை ஒரு கும்பல் வலிமறித்துள்ளது.
வலுகட்டாயமாக அந்த கும்பல் மாணவனை தூக்கிச் சென்று ஓடும் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் சாலையோரத்தில் அந்த மாணவனை தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அந்த மாணவன் 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு இத்தகவலை கூறி புகார் செய்துள்ளார். ஆனால் சம்பவம் நடந்து 2 வாரங்கள் ஆகியும் இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் கூறியுள்ளார்.
அந்த மாணவனுக்கு இரண்டு முறை மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இரண்டு முறையும் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.