ஒடிசாவில் 58 வயதான தந்தையும், 29 வயதான மகனும் ஒரே சமயத்தில் 12 வகுப்பு முடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்தவர் அருண் குமார் பேஜ் (58). இவரது மகன் பிஸ்வஜித் பேஜ் (29). சிறுவயதில் குடும்ப கஷ்டத்தால் அருண் குமார் பேஜினால் படிக்க முடியாமல் போனது. அதேபோல் அவரது மகன் கடந்த 2004-ல் 10-ம் வகுப்பில் ஆங்கிலத்தில் பெயிலானதால் மேற்கொண்டு படிக்கவில்லை.
இந்நிலையில் 12-ம் வகுப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக அருண்குமாரும், விஸ்வஜித்தும் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக இருவரும் விண்ணப்பம் செய்தனர். விடாமுயற்சியுடன் படித்து தேர்வெழுதினர்.
தேர்வின் முடிவில் தந்தை, மகன் இருவரும் 500க்கு 342 மதிப்பெண் எடுத்து தேர்வாகினர்.
படிப்பிற்கு வயது தடையில்லை என அப்பா மகன் நிர்ருபித்ததற்கு அப்பகுதி மக்கள் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.