Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்யாவிட்டால் குண்டு வைப்போம்: மர்ம நபர்கள் மிரட்டல்..!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (07:35 IST)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியின் சக்திக்கு காந்ததாஸ் ஆகியோர் ராஜினாமா செய்யாவிட்டால் குண்டு வைப்போம் என மர்ம நபர்கள் மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு நேற்று ஈமெயில் வந்ததாகவும் அதில் ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்ததாஸ், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி உள்ளிட்ட 11 இடங்களில் வெடிகுண்டு வைப்போம் என்றும் கூறப்பட்டுள்ளது.  

சக்தி காந்ததாஸ், நிர்மலா சீதாராமன் ஆகியோர் இந்தியாவில் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த ஈமெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதனை அடுத்து  ரிசர்வ் வங்கி காவலர் காவல் நிலையத்தில் புகார் செய்த  நிலையில் ரிசர்வ் வங்கியில் சோதனை நடத்தப்பட்டது ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கவில்லை

இந்த நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments