Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னுயிரைக் கொடுத்து சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய படகோட்டி

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2016 (20:38 IST)
ஜம்மூ காஷ்மீரில் உள்ள ஜீலம் நதியில் படகோட்டி ஒருவர் உயிரைக் கொடுத்து சுற்றுலா பயணிகளின் உயிரை காப்பாற்றினார்.


 

 
ராஜ்பாக்கில் வசித்து வரும் குலாம்(52) மொகமது குரூ என்பவர் ஜீலம் நதியில் படகு ஓட்டி வருகிறார். நேற்று மாலை இவரது படகில் சில சுற்றுலாப் பயணிகள் ஏறினார்கள். இவர் அவர்களை அழைத்துச் செல்லும்போது திடீரென படகு கவிழ்ந்து தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது.
 
உடனே குலாம் நீரில் குதித்து படகை கவிழ விடாமல் பார்த்துக்கொண்டதோடு, சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மற்றொரு மோட்டார் படகுக்கு மாற்றினார். பின்னர், கரைக்கு திரும்பும்போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரழிந்தார்.
 
இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் கடற்படை குழுவினருடன் சேர்ந்து குலாம் உடலை தேடிவருகிறார்கள். இன்று மாலை வரை அவரது உடல் கிடைக்கவில்லை. சுற்றுலாப் பயணிகளின் உயிர்களை காப்பாற்றி, தன்னுயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?

மணமகள் வீட்டார் மீது காரை ஏற்றிய மணமகன் உறவினர்.. திருமண வீட்டில் அதிர்ச்சி சம்பவம்..!

இன்னொரு மாவட்ட செயலாளர் விலகல்.. என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

அடுத்த கட்டுரையில்
Show comments