Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''இந்தி'' கற்பது பற்றி புது விளக்கம் கூறிய பாஜக பெண் நிர்வாகி!

''இந்தி'' கற்பது பற்றி புது விளக்கம் கூறிய பாஜக பெண் நிர்வாகி!
, செவ்வாய், 8 நவம்பர் 2022 (17:56 IST)
மத்திய பாஜக அரசு இந்தியை மாநிலங்களில் புகுத்த நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பாஜக நிர்வாகி  ஆலிஷா இந்தி கற்பதற்குப் புது விளக்கம் அளித்துள்ளார்.

இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்ததுடன், ஐ.நா சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை ஆக்க வேண்டுமென்று அக்குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், சமீபத்தில், அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு தன் 11 வது அறிக்கையை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்தது.

அந்த அறிக்கையில், எல்லா மாநிலங்களில் ஆங்கிலத்தைவிட பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் கூறி வருகின்றன.  இது மெல்ல மெல்ல இந்தியைத் திணிக்கும்முயற்சி என்று குற்றம்சாட்டி வருகின்றன.

அதேபோல், மத்திய அரசு இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டு நீட்  தேர்வு வினாத்தாள் தயாரிக்கப்படுவதற்கும் தொடர்ந்து எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.

பாஜக அரசின் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் போன்று ஒரே நாடு ஒரே மொழி திட்டத்தை புகுத்த நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பாஜக நிர்வாகி  ஆலிஷா இந்தி கற்பதற்குப் புது விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ‘’ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அல்லது டெல்லியில் உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் செல்லும்போது, 4 இளைஞர்கள் வந்து தொல்லை செய்தால், உங்களுக்கு இந்தி தெரிந்தால் கெட்ட வார்த்தை பேச முடியும் ‘’என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அணில்கள், ஆமைகளுக்கு புது சரணாலயம்? – தமிழக அரசு அரசாணை!