Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநிலத் தேர்தல் எதிரொலி – விவசாயக் கடன் தள்ளுபடியா?

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (13:39 IST)
நேற்று வெளியான 5 மாநிலத் தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியடைந்துள்ள பாஜக அரசு விவ்சாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடுவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல்  முடிவுகள் அனைத்தும் பாஜக வுக்கு எதிராக வந்துள்ளன. பாஜக ஆட்சி செய்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. மேலும் மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான வாக்குகளைக் கூடப் பெற வில்லை. இதனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வீசியதாக கூறப்பட்ட மோடி அலை ஓய்ந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலங்களே உள்ள நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் மக்கள் மனதில் உள்ளதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டன. அதனால் ஆளும் பாஜக அரசு ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது. இதனால் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள புதிய முயற்சிகளைக் கையில் எடுக்க யோசித்து வருகிறது.

இதனால் இழந்த செல்வாக்கை மீட்க விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யலாம் என யோசித்து வருவதாகவும், இதற்கான அறிககை விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 25 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் விவசாயிகளின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் எனவும் பாஜக யோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

505 வாக்குறுதிகளில் 66 மட்டும்தான் நிறைவேற்றம்.. வெள்ளை அறிக்கை குடுங்க! - அன்புமணி ராமதாஸ்!

1 சவரன் 31 ஆயிரம்தான்..! அறிமுகமாகும் 9 கேரட் தங்கம்! - வாங்கலாமா? என்ன ரிஸ்க்?

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

சீனா, ரஷ்யாவுடன் மோடி கொஞ்சி குலாவுவது வெட்கக்கேடானது! - அமெரிக்க வெள்ளை மாளிகை ஆவேசம்!

90 சதவீத பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு? எந்தெந்த பொருட்கள்? - இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments