கர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பது பற்றி இன்று மாலை 5 மணிக்கு பாஜக ஆலோசனை நடத்த வாய்ப்பு.
பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களுக்கு ஓய்வளிக்கப்படும். ஆனால் அப்போதே 76 வயதாகிருந்த எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆனால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவி என்ற நிபந்தனையோடு தான் முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். அமைச்சர் பிரகலாத்ஜோஷி, மாநில அமைச்சர் முருகேஷ் நிரானி, பாஜக பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லத் ஆகியோரது பெயர்கள் அடுத்த முதல்வருக்கான தேர்வு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே கர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பது பற்றி இன்று மாலை 5 மணிக்கு பாஜக ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.