Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரியை செருப்பால் அடித்த சொனாலி: வேடிக்கை பார்த்த போலீஸ்!!

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (09:07 IST)
பாஜக கட்சியை சேர்ந்த சோனாலி போகட் அரசு அதிகாரியை செருப்பால் அடித்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
டிக்டாக் பிரபலமும் பாஜகவை சேர்ந்தவருமான சோனாலி போகட் கடந்த ஆண்டு ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் விவசாய சந்தையை ஆய்வு செய்த அவர், மக்கள் அளித்த புகார்களை எடுத்துக்கொண்டு வேளாண் உற்பத்தி சந்தை குழுவின் உறுப்பினர் சுல்தான் சிங்கை சந்தித்துள்ளார்.
 
இந்த சந்திப்பின் போது ஏற்பட்ட வாக்குவாத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சோனாலி அந்த அதிகாரியை செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அந்த வீடியோவில் போலீஸார் சம்பவத்தை வேடிக்கை பார்த்து வருவதும் பதிவாகி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. இந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுந்தீப் சிங் சுர்ஜேவாலா, சொனாலி போகட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ என்ன பண்றேன்னு தெரியாதுன்னு நினைச்சியா? தொலைச்சிடுவேன் உன்ன!? - ஓபன் ஸ்டேஜில் மிரட்டல் விடுத்த ராஜேந்திர பாலாஜி!

'தாராவி' மறுசீரமைப்பு திட்டம்.. அதானி குழுமத்திற்கு சாதகமாக உச்சநீதிமன்றம் உத்தரவு..!

கேரளாவை தொடர்ந்து Cinema OTT தொடங்கும் கர்நாடக அரசு! - சித்தராமையா அறிவிப்பு!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்! 7 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்! - அடுத்தடுத்து அதிரடி!

மந்திரவாதி கூறிய பரிகாரம்.. 5 வயது சிறுமியை பலி கொடுத்த தம்பதி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments