Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திரிபுராவில் பாஜக ஆட்சி

Webdunia
சனி, 3 மார்ச் 2018 (14:18 IST)
சமீபத்தில் நடைபெற்று முடிந்த திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வந்தது. இதில் திரிபுராவின் முடிவுதான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அங்கு 20 ஆண்டுகளாக தொடர்ந்து மார்க்கிஸ்ட் கம்யூனிஸ் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில் ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது பாஜகவிடம் பறிகொடுக்குமா?: என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது

இந்த நிலையில் இன்று காலை வாக்குகள் எண்ண தொடங்கியது முதல் இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி இருந்த நிலையில் தற்போது பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. பாஜக 41 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரிபுராவில் கடந்த 20 வருடங்கள் போட்டியே இல்லாமல் ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு 18 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் இந்த அக்கட்சிக்கு 49 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காங்கிரஸ் கட்சி கடந்த 2013 தேர்தலில் 10 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது ஒரு இடத்தில் கூட அந்த கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments