Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஜாரிட்டியை தாண்டி பாஜக அபார வெற்றி.. இந்தியா கூட்டணி படுதோல்வி..!

Mahendran
சனி, 23 நவம்பர் 2024 (09:39 IST)
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் இன்று காலை 7 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் உள்ள தகவலின் படி, பாரதிய ஜனதா கட்சி 50 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி 27 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் வெறும் 13 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி வெறும் 12 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருப்பதால், இந்தியா கூட்டணி இந்த மாநிலத்தில் படுதோல்வி அடைந்திருப்பதாக தெரிகிறது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க 145 தொகுதிகள் தேவை. ஆனால் தற்போது பாஜக கூட்டணி 154 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இங்கு பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
 
அதேபோல், ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 42 தொகுதிகள் தேவை. பாஜக 42 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளதால், இங்கு பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
 
இரண்டு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்துள்ளதால், அதன் தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
 
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments