Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரு வடகிழக்கு மாநிலங்களில் பாஜக போட்டியிடாமல் விலகல்

இரு வடகிழக்கு மாநிலங்களில் பாஜக போட்டியிடாமல் விலகல்

Sinoj

, சனி, 23 மார்ச் 2024 (15:36 IST)
இரு வடகிழக்கு மாநிலங்களில் பாஜக போட்டியிடாமல் விலகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாடு முழுவதும்  பிரசாரம் செய்து வருகிறார்.
 
தமிழ்நாட்டில் தேசிய ஜன நாயக கூட்டணியில், அமமுக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தொகுதிப் பங்கீடுகள் இறுதியான நிலையில்,  பாஜக சார்பில்  போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்து வருகிறது கட்சி தலைமை.
 
அதன் கூட்டணி கட்சிளும் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளது.
 
இந்த   நிலையில்,  இரு வடகிழக்கு மாநிலங்களில் பாஜக போட்டியிடாமல் விலகியுள்ளது.
அதன்படி, வரும் மக்களவை தேர்தலில், மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பாஜக போட்டியிடவில்லை. அதன் கூட்டணி கட்சிகளுக்குப் ஆதரவளித்துள்ளது.
 
மேலும்  மணிப்பூரில் மொத்தமுள்ள 2 தொகுதிகளில், ஒன்றில் பாஜகவும் மற்றொன்றில் கூட்டணிக் கட்சியும் போட்டியிடுகின்றன.அருணச்சலப் பிரதேசத்தில் உள்ள 2 தொகுதிகளிலும் மிசோரமில் உள்ள 1 தொகுதியில் பாஜக போட்டியிடுவதாக தகவல் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் மீது வழக்குப் பதிவு