Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக விருந்தில் நிதின்கட்காரிக்கு முக்கியத்துவம்: பிரதமர் ஆவது உறுதியா?

Webdunia
புதன், 22 மே 2019 (08:27 IST)
நேற்று நடைபெற்ற பாஜக விருந்தில் பிரதமர் மோடியை விட நிதின்கட்காரிக்கே அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் பாஜக ஆட்சி அமைக்கும்பட்சத்தில் அவர் பிரதமர் ஆவது உறுதி என்றே கூறப்படுகிறது.
 
மக்களவை தேர்தலின் வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படவுள்ள நிலையில் நேற்று அமித்ஷா, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து வைத்தார். இந்த விருந்தில் அதிமுக, தேமுதிக, உள்பட பாஜகவின் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 
 
இந்த விருந்தில் பிரதமர் மோடியை விட நிதின்கட்காரியையே கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசுவதில் ஆர்வம் காட்டினர். மேலும் நிதின்கட்காரி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் தாங்கள் ஒத்துழைப்பு தர தயார் என வெளிப்படையாகவே ஒருசில கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது
 
இதனையடுத்து பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் நிதின்கட்காரிதான் பிரதமர் வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதற்கு ஒருசில நிபந்தனைகளுடன் மோடி ஒப்புக்கொள்வார் என்றே கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மோடிக்கு பாஜக தேசிய தலைவர் பதவி அல்லது ஜனாதிபதி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments