Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் குறித்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்போகும் பாஜக!

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (18:15 IST)
காஷ்மீர் சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்டதன் அனுகூலங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கும் வகையில் நாடு தழுவிய பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்க மசோதா இந்தியா முழுவதும் பல்வேறுவிதமான கருத்துகளை உருவாக்கியுள்ளன. தற்போது காஷ்மீரில் அமைதி நிலை திரும்பியிருக்கும் நிலையில், காஷ்மீர் சிறப்பு பிரிவு ரத்தால் நாட்டுக்கு ஏற்பட உள்ள நன்மைகள் குறித்து பாஜகவினர் அடுத்த மாதம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், நகரங்களிலும் பிரம்மாண்ட பொது கூட்டங்களையும், பிரச்சாரங்களையும் நிகழ்த்த இருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள், பாஜக உறுப்பினர்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு விளக்கவுரை அளிக்க இருக்கின்றனர் என கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் இப்போதிருந்தே பாஜக ஈடுப்பட்டு வருகிறது.

மேலும் காஷ்மீரில் ஸ்ரீநகர் உட்பட 9 முக்கியமான நகரங்களிலும் பாஜக சார்பில் பிரச்சாரங்கள் நடைபெற இருக்கின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

இன்று தவெக பொதுக்குழு.. சரியாக 9 மணிக்கு வருகை தந்த விஜய்..!

வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.. அப்ப விஜய் நிலைமை? - தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments