Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களவை தேர்தலில் 30 இடங்களில் வெற்றி.. மெஜாரிட்டியை நெருங்கும் பாஜக..!

Siva
வியாழன், 29 பிப்ரவரி 2024 (07:01 IST)
மக்களவையில் ஏற்கனவே மெஜாரிட்டிடன் இருக்கும் பாஜக மாநிலங்களவையில் மட்டும் மெஜாரிட்டி இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அங்கும் மெஜாரிட்டியை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 சமீபத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்ற போது காலியாக இருந்த 56 மாநிலங்களவை இடங்களில் 30 இடங்களை பாஜக வென்று உள்ளது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களித்ததால் கூடுதலாக இரண்டு இடங்கள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதன் காரணமாக மாநிலங்களவையில் தற்போது பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது என்பதும் பாஜகவுக்கு மொத்தம் 97 எம்பிக்கள் மாநிலங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தேசிய ஜனநாயக கூட்டணியில் மாநிலங்களவையில் மொத்தம் 117 எம்பிக்கள் இருக்கின்றனர் என்பதால் மெஜாரிட்டிக்கு இன்னும் நான்கு எம்பிக்கள் மட்டுமே தேவை என்பதால் கிட்டத்தட்ட மெஜாரிட்டியை பாஜக நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதன் காரணமாக மாநிலங்கள்வையில் இனி ஒரு மசோதா இயற்ற வேண்டுமென்றால் பிரச்சனை இருக்காது என்பது தெரிய வருகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

17 ஆயிரம் மதிப்புள்ள Perplexity AI Tool இலவசம்! ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!

அடுத்த கட்டுரையில்
Show comments