Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த டார்கெட் அகிலேஷ் யாதவ்வுக்கா? சம்மன் அனுப்பிய சிபிஐ..!

Siva
வியாழன், 29 பிப்ரவரி 2024 (06:40 IST)
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதை அடுத்து மத்திய அரசின் அடுத்த டார்கெட் அவர் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு தொடர்ச்சியாக அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளால் பிரச்சனை எழுந்து வருவதாக குற்றச்சாட்டு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து அனுப்பி வரும் அமலாக்கத்துறை தற்போது அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாளில் 13 திட்டங்களுக்கு அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது அனுமதி அளித்ததாகவும் இது தொடர்பாக 11 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிபிஐ சோதனை நடத்தியது

அப்போது சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அப்போது முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்

இந்த நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 29ஆம் தேதி அகிலேஷ் யாதவ் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த சம்மன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

மாலை நேரத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களை டார்கெட் செய்த மழை!

நாங்க சுந்தரா ட்ராவல்ஸ் இல்ல.. உங்கள முடிச்சு விடப் போற ட்ராவல்ஸ்! - திமுகவிற்கு ஆர்.பி.உதயக்குமார் பதில்!

இலங்கையில் 65 சிறுமிகளின் உடல் தோண்டியெடுப்பு.. எலும்புக்கூடு அருகே பள்ளி பைகள், பொம்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments