Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேதாஜியை கொன்றதே காங்கிரஸ்தான்! – குண்டை போட்ட பாஜக எம்.பி!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (16:19 IST)
இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை காங்கிரஸ்தான் கொன்றது என பாஜக எம்.பி குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மக்களவை தொகுதி பாஜக எம்.பியாக இருப்பவர் சாக்சி மகராஜ். இவர் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசியபோது “எனது குற்றச்சாட்டு என்னவென்றால் காங்கிரஸ்தான் நேதாஜியை கொன்றது. மகாத்மா காந்தியோ அல்லது பண்டிட் நேருவோ கூட சுபாஷ் சந்திர போஸின் புகழுக்கு முன்னால் நிற்க முடியாது. அவரது இறப்பு குறித்து அப்போதைய பிரதர் நேரு ஏன் விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்பதே மர்மமாக உள்ளது” என கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக எம்.பிக்கள் அவ்வபோது பேசும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் நிலையில் தற்போது சாக்‌ஷி மகாராஜின் கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments