Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாஜ்மஹாலை இடித்துவிட்டு கோவில் கட்ட வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

tajmahal
, வியாழன், 6 ஏப்ரல் 2023 (15:17 IST)
தாஜ்மஹால் மற்றும் குதுப்மினாரை இடித்துவிட்டு கோவில் கட்ட வேண்டும் என அசாம் மாநில பாஜக எம்எல்ஏ ரூப்ஜோதி என்பவர் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
வரலாற்று புத்தகங்களில் ஏற்கனவே முகலாய மன்னர்களின் பாடங்கள் நீக்கப்பட்டு வருவதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்ட தாஜ்மஹால் குதுப்மினார் ஆகியவற்றை தகர்க்க வேண்டும் என்றும் அந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்றும் அசாம் மாநில பாஜக எம்எல்ஏ ருப்ஜோதி தெரிவித்துள்ளார். 
 
தாஜ்மஹாலையும் குதுப்மினாரையும் இடித்து தடை மட்டமாக வேண்டும் என்றும் அந்த இடத்தில் அழகான இந்து கோயில்களை கட்டி எழுப்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மும்தாஜ் இறந்த பிறகு ஷாஜகான் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார் என்றும் இதை எப்படி உலக அதிசயங்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இந்து மன்னர்களிடம் இருந்து  பறிக்கப்பட்ட பணத்திலிருந்து தான் தாஜ்மகாலை ஷாஜகான் கட்டியுள்ளார் என்றும் அது நம்முடைய பணம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
 
Edite by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனடாவில் இருந்து காதலரை தேடி வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்..!