Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசேனா எம்.எல்.ஏ.வை துப்பாக்கியால் சுட்ட பா.ஜ.க.எம்.எல்.ஏ.. காவல் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
சனி, 3 பிப்ரவரி 2024 (15:36 IST)
மும்பை காவல் நிலையத்தில் சிவசேனா எம்எல்ஏவை, பாஜக எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை அருகே உள்ள ஒரு காவல் நிலையத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக சிவசேனா எம்எல்ஏ ராகுல் பட்டியல் மற்றும்  பாஜக எம்எல்ஏ கணேஷ் ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை வந்துள்ளது. 
 
போலீசார் இரு அணிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருந்த நிலையில் திடீரென  கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பாஜக எம்எல்ஏ தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சிவசேனா தலைவர் மீது சரமாரியாக சுட்டார். 
 
இதில் சிவசேனா எம்எல்ஏ மீது நான்கு தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும் இதனை அடுத்து காவல்துறையினர் பாஜக எம்எல்ஏவிடம்  இருந்து துப்பாக்கியை பிடுங்கி அவரை கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
தற்போது சிவசேனா எம்.எல்.ஏ சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

முதுநிலை ஆசிரியர் தேர்வு எப்போது? 2025ஆம் ஆண்டின் அட்டவணை வெளியீடு..!

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments