Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகார்: போலீஸ் காவலில் போட்டு தள்ளிய பாஜக எம்எல்ஏ அடியாட்கள்!

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (14:46 IST)
உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ பாலியல் தொல்லை அளித்தாக புகார் அளித்த பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் குல்தீப் சிங் செங்கர். இவர் தனது நண்பர்கலுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
ஆமால், காவல் அதிகாரிகள் இந்த புகாரை ஏற்க மறுத்த நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் இல்லம் அருகே தீக்குளிக்க முயன்றார். ஆனால், காவல் துறையினர் அந்த பெண்ணை மீட்டுள்ளனர். 
 
அதன் பின்னர், அந்த பெண்ணின் தந்தையை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். விசாரணையின் போது அந்த எம்எல்ஏவின் அடியாட்கள் பெண்ணின் தந்தையை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், தீவிர காயங்களுடன் மருத்துவமையின் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரணமடைந்துள்ளார். காவல் அதிகாரிகளின் விசாரணையின் போது இவர் மரணம்டைந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலைய அதிகாரிகள் நால்வர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்