நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
இதில், மிக அதிகமான வாக்களார்கள் கொண்ட தொகுதி என்பதால் உத்தரபிரதேசம் முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிந்து வெளியான கருத்து கணிப்புகளில், பாஜக அங்கு ஆட்சியை பிடிக்கும் எனக் கூறப்பட்டது. ஏனெனில், பணமதிப்பீடு தொடர்பாக, ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு இந்த மாநிலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றும் அகிலேஷ் யாதவ் பதவியிழப்பார் என்றும் கூறப்பட்டது. அந்த கருத்து கணிப்புகள் தற்போது உண்மையானது.
உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை 308 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் பாஜக ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. இந்த தேர்தல் முடிவின் மூலம் 15 ஆண்டுகால குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.