Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக நிர்வாகி கைது...

Advertiesment
ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக நிர்வாகி கைது...
, புதன், 5 ஜூலை 2017 (13:48 IST)
பாஜக பிரமுகர் ஒருவர் ஓடும் பேருந்தில் ஒரு இளம் பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த விவகாரம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாஜக பிரமுகரான ரவிந்திர பவந்தடே என்பவர் மீது 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், தான் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, ரவிந்திர பவந்தடே தனக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் எனவும், தன்னையே திருமனம் செய்து கொள்கிறேன் எனக்கூறி என்னை முத்தமிட்டார். மேலும் தன்னிடம் தவறாக நடக்கவும் முயற்சி செய்தார் என கூறியிருந்தார்.
 
இதையடுத்து, அந்த பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் சோதனை செய்த போது, அந்த பெண் கூறியது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
 
ஆனால், கட்சி நடவடிக்கைகளில் சரியாக கலந்து கொள்ளாத அவரை, ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக அந்த மாநில பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுடன் சமரசமா? வாய்ப்பே இல்லை: சீனா அதிரடி!!