தற்பொழுது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் படி 5 மாநில தேர்தலிலும் பாஜக கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது
ராஜ்ஸ்தான், மத்தியப் பிரதேசம், சண்டிகார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் கடந்த ஒரு மாதமாக பல கட்டமாக நடைபெற்று வந்தது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாக இருகின்றன. தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி தெலிங்கானாவில் டிஆரெஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. மற்றபடி ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்திஸ்கர் ஆகிய இடங்களில் பாஜகவை விட காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மிசோரமை பொறுத்தவரை எம்.என்.எஃப் முன்னிலையில் உள்ளது.
போகுறபோக்கை பார்த்தால் இந்த தேர்தலில் பாஜக கடும் பின்னடைவை சந்திக்க நேரிடும் போலிருக்கிறது. இந்த தேர்தல் முடிவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என அச்சத்தில் இருக்கிறதாம் பாஜக மேலிடம்.