Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எப்படி தெரிந்தது? - தேர்தல் ஆணையத்திற்கு முன்பே அறிவித்த பாஜக ஐடி விங்

எப்படி தெரிந்தது? - தேர்தல் ஆணையத்திற்கு முன்பே அறிவித்த பாஜக ஐடி விங்
, செவ்வாய், 27 மார்ச் 2018 (12:46 IST)
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் அறிவிக்கும் முன்பே பாஜக ஐடி விங் அறிவித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடக சட்டசபையில் 224 பேரவை தொகுதிகளுக்கும்  ஒரே கட்டமாக வருகிற மே 12ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என அறிவித்தார். மேலும், வேட்பு மனு தாக்கல் ஏப் 17ம் தேதி எனவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.  
 
காலை 11 மணியளவில் பேசத் தொடங்கிய அவர் 11.30 மணிக்கு பின்பே தேர்தல் தேதியை அறிவித்தார். ஆனால், சரியாக 11.08 மனியளவில், பாஜக ஐடி விங்கின் டிவிட்டர் பக்கத்தில் கர்நாடகாவின் தேர்தல் தேதியை அமித் மல்வியா என்பவர் அறிவித்தார்.
webdunia

 
எனவே, தேர்தல் ஆணையர் அறிவிக்கும் முன்பே பாஜகவிற்கு எப்படி இந்த தகவல் தெரிந்தது? இதுதான் பாஜகவிற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உள்ள கள்ள உறவு என பலரும் சமூக வலைத்தளங்களில் கொதித்தெழுந்தனர். இந்த விவகாரம் பூதாகரம் ஆகியதைத் தொடர்ந்து, இந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது.
 
இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து, இது தொடர்பாக விசாரணை செய்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள்-போலீஸ் இடையே தள்ளுமுள்ளு