உ.பி. இடைத்தேர்தல் - பாஜகவிற்கு பின்னடைவு

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (13:03 IST)
லோக்சபா இடைத் தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளிலும் பாஜக பெரும் சரிவை சந்திதுள்ளது பாஜகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 
லோக்பூர் லோக்சபா உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத்,  உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால், உத்தரபிரதேசம் மாநில முதலமைச்சரானார். அதேபோல், பல்பூர் தொகுதி உறுப்பினராக இருந்த கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வரானார். எனவே, அவர்கள் இருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால், காலியாக இருந்த இரு தொகுதிகளுக்கும் கடந்த 11ம் தேதி தேர்தல் நடந்தது.
 
அந்த தொகுதிகளில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி கோரக்பூர் தொகுதில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் நிஷாத்தும், பல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங்கும் பாஜக வேட்பாளர்களை விட முன்னிலையில் உள்ளனர்.
 
தற்போது உ.பியில் முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத், கடந்த 5 தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதி கோரக்பூர். ஆனால், தற்போது அங்கு பாஜக தோல்வியை சந்தித்துள்ளது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - வைகோ ஒன்றாக பேட்டி! தேவர் குருபூஜையில் நடந்த ஆச்சர்யம்!

மீண்டும் கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்.. நெரிசல் வழக்கில் தீவிர விசாரணை..!

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இணைத்த பெருமகனார்! - தேவர் குருபூஜை பிரதமர் பதிவு!

விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..

இனிமேல் 6 வயது நிரம்பினால் தான் 1ஆம் வகுப்பில் சேர்க்க முடியும்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments