Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணி இருந்தும் நோ யூஸ்.. டெல்லியில் 7 தொகுதிகளையும் அள்ளும் பாஜக..!

Mahendran
சனி, 16 மார்ச் 2024 (08:54 IST)
டெல்லியில் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது என்றும் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று உடன்பாடு செய்யப்பட்டது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் டெல்லியில் இரு கட்சிகளும் கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதால் இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது வந்துள்ள கருத்துக் கணிப்பின்படி ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டாலும் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக தான் வெல்லும் என்று தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரு கட்சிகள் இணைந்தாலுமே பாஜகவை வரும் தேர்தலில் ராஜா வீழ்த்த முடியாது என்றும் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே ஒரு சீட்டு கூட கிடைக்காது என்றும் ஏபிபி மற்றும் சிவோட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் டெல்லியில் பாஜகவுக்கு 57 சதவீத வாக்குகளும் இந்தியா கூட்டணிக்கு 36 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் 7 தொகுதிகளிலும் பாஜக தான் வென்றது என்பதும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு தொகுதி கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

நாடாளுமன்றத்தில் இன்று வக்பு மசோதா தாக்கல்.. திடீரென ஆதரவு தெரிவித்த கிறிஸ்துவ அமைப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments