பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

Mahendran
செவ்வாய், 2 டிசம்பர் 2025 (16:42 IST)
கேரள உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூணாறு பஞ்சாயத்தில் பா.ஜ.க. போட்டியிடும் வேட்பாளர் பெயர்  சோனியா காந்தி என்பது, உள்ளூர் அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
 
இவரது தந்தை, மறைந்த துரை ராஜ், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர். முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீதான அபிமானத்தால் தனது மகளுக்கு அந்த பெயரை சூட்டியுள்ளார்.
 
ஆனால், திருமணத்திற்கு பிறகு இவரது அரசியல் நிலைப்பாடு மாறியது. இவரது கணவர் சுபாஷ், பா.ஜ.க-வின் தீவிர ஊழியர். கணவரின் வழியை பின்பற்றி, சோனியா காந்தி தற்போது பா.ஜ.க. ஆதரவு வேட்பாளராக போட்டியிடுகிறார்.
 
இவரது பெயர், காங்கிரஸ் வேட்பாளரான மஞ்சுளா ரமேஷுக்கு சவாலாக மாறியுள்ளது. ஏனெனில் காங்கிரஸ் பிரமுகரின் பெயரில் போட்டியிடுவது வாக்காளர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, வாக்குகளை பிரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
கேரள உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி.கே. சிவக்குமார் எப்போது முதலமைச்சராவார்? சித்தராமையா கூறிய பதில்..!

'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம், ஆனால் கட்டாயம் அல்ல: மத்திய அமைச்சர் சிந்தியா விளக்கம்!

புதுவையில் விஜய்யின் ரோடு ஷோ... அனுமதி பெற முதலமைச்சரை சந்திக்கும் புஸ்ஸி ஆனந்த்!

ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை: வரதட்சணை கொடுமை புகார் குறித்து விசாரணை!

SIR பெயரில் ஒரு சைபர் க்ரைம்.. போலி APK ஃபைல்களை க்ளிக் செய்ய வேண்டாம்..

அடுத்த கட்டுரையில்
Show comments