Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக வேட்பாளருக்கு 14 நாட்கள் சிறை: அதிர்ச்சியில் தொண்டர்கள்

Webdunia
வியாழன், 28 மார்ச் 2019 (18:52 IST)
வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்து வரும் ஒரு வேட்பாளருக்கு 14 நாட்கள் சிறை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுபவர் பிரகாஷ்பாபு. இவர் சமீபத்தில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது என்று போராட்டம் செய்தவர்களில் ஒருவர். அந்த போராட்டத்தில் நடந்த வன்முறை குறித்த வழக்கில் இவருடைய பெயரும் இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பிரகாஷ்பாபுவை 14 நாள் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பா.ஜ.க. வேட்பாளருக்கு 14 நாள் காவல் என  பத்தனம்திட்டா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நீதிமன்ற காவலில் உள்ள ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியுமா? அப்படியே போட்டியிட அனுமதிக்கப்பட்டாலும் சிறையில் இருக்கும் அவர் எப்படி பிரச்சாரம் செய்வார் என்று பாஜக கடும் குழப்பத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments