Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயில் வடை சுடும் ஆட்சி.. மெகா கூட்டணியை மொக்கையாக்கிய ஸ்டாலின்

Webdunia
வியாழன், 28 மார்ச் 2019 (18:39 IST)
தமிழகத்தில் பாராளுன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மதுரையில் உள்ள வண்டியூரில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.செங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். 
 
அப்போது அவர் பேசியதாவது, ஆட்சியின் கொடுமையை தாங்க முடியாத நிலையில் வெயிலின் கொடுமை பரவாயில்லை என காத்திருக்கிறீர்கள். தாயுள்ளத்தோடு கலைஞர் ஆட்சி நடத்தினார், ஆனால் எடப்பாடி பேய் ஆட்சி நடத்தி வருகிறார். 
 
45 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மை 6.1%உயர்ந்துள்ளாக தேசிய மாதிரி ஆய்வில் தெரிய வந்துள்ளது. மோடி செய்தது மோசடி என்பதால் அவரை மோடி என்று அழைக்க வேண்டாம் மோசடி என்று அழையுங்கள்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டது. ஆனால் இதுவரை பணம் ஒதுக்கப்படவில்லை. நிதி ஒதுக்க மோடி மறந்து விடுவார். பாஜக ஆளும் உத்திரப்பிரதேசத்திற்கே எய்ம்ஸ்க்கு முறையாக பணம் ஒதுக்கப்படாத மோடி தமிழக எய்ம்ஸ்க்கு மட்டும் எப்படி நிதி ஒதுக்குவார்? 
 
மூடிக் கேற்ற ஜாடியாக மோடிக்கேற்றவராக எடப்பாடி இருக்கிறார். சர்வாதிகாரியாக உள்ள மோடியும் உதவாக்கரையா உள்ள எடப்பாடியும் ஆட்சி இருந்தால் மட்டும் போதும் என நினைக்கிறார்கள். மக்களை பற்றி சிந்திப்பதில்லை.
 
இது துப்புகெட்ட ஆட்சி அதற்கு தூத்துக்குடியை சாட்சி. இது ஊழல் ஆட்சி அதற்கு ரபேல் சாட்சி. இது கொள்ளைக்கார ஆட்சி அதற்கு ஜிஎஸ்டி சாட்சி. இது மதவெறி ஆட்சி அதற்கு மாட்டுக்கறியே சாட்சி. இது வாயில் வடை சுடும் ஆட்சி அதற்கு மோடியே சாட்சி என பேசி பிரச்சாரத்தை தூள் கிளப்பினார் ஸ்டாலின். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. ஒரு வாரம் ஆகியும் சிக்காத குற்றவாளி..!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளி விலையும் உயர்வு..!

அமலாக்கத்துறை முக்கிய அதிகாரி திடீர் ராஜினாமா.. இரு முதல்வர்களை கைது செய்தவர்..!

முதல்வர் ஸ்டாலின் சகோதரர் மு.க.முத்து காலமானார்! அரசியல் பிரபலங்கள் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments