காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு சிலர் பாஜகவுக்காக வேலை செய்பவர்கள் இருப்பதாகவும் அவர்களை வெளியேற்ற இருப்பதாகவும் ராஜீவ் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி குஜராத் மக்களுடன் உறவு ஏற்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்றும் 30 ஆண்டுகளாக குஜராத் மக்களின் எதிர்பார்ப்புகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சியில் இரு வகையான தலைவர்கள் உள்ளனர், ஒன்று பொதுமக்களுடன் நின்று போராடுபவர்கள், மற்றொன்று மக்களை மதிக்காமல் பாஜகவுடன் இணைந்து செயல்படுபவர்கள்.
இந்த இரு குழுக்களையும் பிரிப்பது தான் எனது வேலை, கண்டிப்பாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ் காரர்களை கண்டுபிடித்து கட்சியிலிருந்து வெளியேற்றுவோம் என்றும் இதை செய்வதன் மூலம் குஜராத் மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலேயே ஒரு டீம் பாஜகவுக்கு வேலை செய்வதாக அந்த கட்சியின் எம் பி ராகுல் காந்தியை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சில நாட்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலர் களையெடுக்கப்பட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.