கேரள மாநிலம் குமுளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதையடுத்து குழந்தையின் பிறப்பு குறித்த விவரங்களை பதிவேட்டில் தேடிப் பார்த்தார். ஆனால் அது பதியப்படவில்லை என தெரிகிறது. இதனால் சான்றிதழ் கொடுக்க முடியாமல் அதிகாரி இழுத்தடித்தார். பல நாட்கள் பஞ்சாயத்து அலுவலகம் வந்துபோன அந்த பெண் அதிகாரியிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.
இதையடுத்து அந்த பெண்ணிடம் சமரசம் பேசிய அதிகாரிகள் ஒரு கவரில் சான்றிதழை வைத்து கொடுத்தனர். இதனை வாங்கிய பெண் வீட்டிற்கு வந்ததும் சான்றிதழை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காரணம் அது வேறு ஒருவருடைய மரணமடைந்ததற்ககான இறப்பு சான்றிதழ் என்று தெரியவந்தது.
இதனால் கடும் கோபம் அடைந்த அந்த பெண் பஞ்சாயத்து அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டார். தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்ட அதிகாரிகள், அந்த பெண்ணிற்கு உரிய சான்றிதழை கொடுத்து அனுப்பினர்.