உத்தரகாண்ட் பல்கலைகழகத்திற்கு பிபின் ராவத் பெயர்! – சட்டமன்றத்தில் முடிவு!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (15:38 IST)
மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் பெயரை புதிய பல்கலைகழகத்திற்கு சூட்ட உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.

ஊட்டி அருகே குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இன்று 13 ராணுவ வீரர்கள் உடலும் டெல்லியில் ராணுவ மரியாதை செய்யப்படுகிறது. பின்னர் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் பிபின் ராவத் பிறந்த மாநிலமான உத்தரகாண்ட்டில் அவரது நினைவாக புதிதாக கட்டிவரும் பல்கலைகழகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ ஒருவர் பேசியுள்ளார். இதற்கு பல சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் பல்கலைகழகத்திற்கு அவரது பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல ராணுவ தியாகிகளுக்காக கட்டப்படும் நினைவிடத்திற்கும் அவரது பெயரை சூட்ட வேண்டும் என சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments