தகவல் தொழில் நுட்பம் அபரிமிதமாய் வளர்ந்துள்ள இன்றைய காலத்தில் நாம் நினைத்ததை ஆன்லைன் விற்பனை நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்டு, போன்றவற்றின் மீது வீட்டிற்கே கொண்டுவரச் செய்ய முடியும். அதேபோலல் உணவு பொருள் விநியோகத்தில் உள்ள, ஊபர், சொமாட்டோ, சுவீக்கி போன்றவை இந்தியாவில் வலுவாக காலூன்றியுள்ளன.
வீட்டில் இருந்தபடி ஹோட்டலில் இருந்து உணவுப்பொருட்களை ஆர்டர் செய்வதால் மக்களுக்கு நேரம் மிச்சமாகிறது. இந்த நிலையில், ஹோட்டலுக்கு சென்று ஆர்டர் செய்வதற்கும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் இணையதள பில்லுக்கும் இடையேனான வித்யாசம் பற்றிய ஒரு ஒப்பீடு வைரலாகி வருகிறது.
அதில், நேரடியாக ஹோட்டல் சென்றால் உணவுப் பொருள் ரூ.488 சிஜிஎஸ்டி 12.2 என்றும், எஸ்கிஎஸ்டி 12.2 என்றும் ஆகமொத்தம் ரூ.512 ஆக பில் போட்டுள்ளனர். இதே ஆன்லைனில் வாங்கிய அதே பொருளுக்கு ரு.689 ஆகியுள்ளது. இந்தப் பில் தற்போது வைரலாகி வருகிறது.