கேரளாவில் உள்ள வங்கி ஒன்றில் மேனேஜர் பீஃப் கறிக்கு தடை விதித்ததால் ஊழியர்கள் நூதன போராட்டம் மேற்கொண்டது வைரலாகியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் கனரா வங்கி கிளையில் சமீபத்தில் மேனேஜராக பீகாரை சேர்ந்த ஒரு நபர் பொறுப்பேற்றுள்ளார். பொறுப்பேற்றது முதலாக அந்த கிளை வங்கி ஊழியர்களை மனரீதியாகவும், அலுவல் ரீதியாகவும் அவர் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
கேரளாவில் பொதுவாகவே அதிகமான மக்கள் பீஃப் சாப்பிடுவது வழக்கம் என்பதால் அங்கு பீஃப் பிரபலம். அந்த வங்கியில் உள்ள உணவகத்தில் வாரத்தில் சில முறை பீஃப் செய்வது வழக்கமாக இருந்த நிலையில், இந்த மேனேஜர் உணவகத்தில் பீஃபை தடை செய்துள்ளார்.
ஏற்கனவே மேனேஜர் மீது பல காரணங்களால் அதிருப்தியில் இருந்த ஊழியர்கள் இந்த விவாகத்தால் ஆத்திரமடைந்துள்ளனர். மேனேஜருக்கு பாடம் புகட்ட நினைத்த அவர்கள் வங்கி ஊழியர்கள் சார்பில் பீஃப் பிரியாணி போட்டு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு மேலும் பலரது ஆதரவும் கிடைத்திருக்கிறது.
இதுகுறித்து பேசிய ஊழியர்கள், அனைவரும் பீஃப் சாப்பிட வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. உணவைப் பொறுத்த வரை எதை சாப்பிட வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்பதை சுட்டிக்காட்டவே இந்த நூதன போராட்டம் என கூறியுள்ளனர்.
Edit by Prasanth.K